அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் முதல் உலகப்போரின் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எடுத்திருக்கிறார்.
அயர்லாந்தின் வடக்குக் கடற்கரையில் ஒரு சிறுவன் கையெறி வெடிகுண்டை பார்த்திருக்கிறார். உடனடியாக அவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு ஒரு ராணுவ தொழில்நுட்ப அதிகாரி, அந்த கடற்பகுதிக்கு சென்று அந்த கையெறி குண்டை ஆய்வு செய்திருக்கிறார்.
அதன்படி, அது முதல் உலகப்போரின்போது உபயோகப்படுத்தப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு என்று தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அந்த வெடிகுண்டு வெடிக்கும் திறனுடன் இருந்திருக்கிறது. எனவே, உடனடியாக ஆட்கள் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று அதனை செயலிழக்க செய்திருக்கிறார்கள்.