Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தனியாக கடையில் இருந்த பெண்” கைவரிசையை காட்டிய 4 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடைக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலை பகுதியில் மணிவண்ணன்-சுதந்திரவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திரவள்ளி கடைகள் இருந்தார். அப்போது சுரேஷ், ரெஜி, ராமசாமி, பரமசிவம் ஆகிய 4 பேர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியை கொண்டு சுதந்திரவள்ளியை சரமாரியாக தாக்கி விட்டு கடையில் இருந்த மிக்சி, பிளாஸ்டிக் நாற்காலி, மின்சார அடுப்பு மற்றும் 3 ஆயிரம்  ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து சுதந்திரவாள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து கொள்ளையடித்து சென்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், ராமசாமி ஆகிய 2 பேர் மீது கொலை வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |