Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்… குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் ஒரு பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் எண்ணமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் பிரேமா(28). இவர் நேற்று தனது ஒன்றரை வயது மகனுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே சென்றதும் திடீரென்று பையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலிலும், தனது மகன் தருண்தேவ் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஓடிச்சென்று மண்ணெண்ணெய் பாட்டிலே பிடுங்கினார்.

அதன்பின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் பிரேமா அளித்த புகார் மனுவில் கூறியதாவது, நானும் அந்தியூர் மைக்கேல் பாளையத்தில் வசித்த பிரான்சிஸ் சேவியரின் மகன் சந்தோஷ் நவீன்(30) என்பவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தோம். எங்களுடைய காதலுக்கு சந்தோஷ் நவீன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2014ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஏற்காட்டில் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின் எண்ணமங்கலத்தில் குடும்பம் நடத்தும் வந்துள்ளோம். என்னுடைய கணவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்ததால் நாங்கள் அங்கு சென்றோம்.

இதனையடுத்து கடந்து 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் எனது கணவர் எம்.பி.ஏ தேர்வு எழுத செல்வதாகவும், தேர்வு முடிந்த பிறகு தனது பெற்றோருடன் பேசி என்னை அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். இதனால் நான் எனது தாய் வீட்டில் இருந்தேன். ஆனால் எனது கணவர் என்னை அழைத்து செல்லவில்லை. இதுகுறித்து அவரிடம் சென்று கேட்டதற்கு என்னை சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சந்தோஷம் நவீன் மீது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தேன். இந்த புகார் மனு பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதற்கு இடையில் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் எனது கணவரின் வீட்டிற்கு சென்று என்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவரும், அவருடைய பெற்றோரும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பினார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி எனது கணவர் சந்தோஷம் நவீனுக்கும், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த உடன் மீண்டும் எனது கணவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |