ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய நபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள க.க. சாவடி பகுதியில் பெயிண்டரான ஜெகதீஷ்(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெகதீஷூக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவனை ஜெகதீஷ் மறைவிடத்திற்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவன் மறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அறிந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஜெகதீஷூக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.