Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… லாரி கவிழ்ந்து” 45 ஆயிரம் முட்டைகள் சேதம்” போலீஸ் விசாரணை….!!!!

சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை  காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம்  அகற்றியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில்  அன்சர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் நாமக்கல்லில் இருந்து சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வடதொரசலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் மினி லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான முட்டைகள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |