கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னையில் இன்றும் நாளையும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சென்னை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மே 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் எனும் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.