Categories
மாநில செய்திகள்

வீடு வாங்குவோர் கவனத்திற்கு…. சென்னையில் உயரும் விலை…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

சென்னை மற்றும் பெங்களூருவில் வீடு விலை அடுத்த 2 ஆண்டுகளில் 5.5% முதல் 6.5% வரை உயரும் என்று ஆய்வு ரிப்போர்ட் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் மும்பை, டெல்லி, குருகிராம், நொய்டா மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் வீடுகளின் விலை அடுத்த ஆண்டுகளில் 4% முதல் 5% வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. வரும் நாட்களில் வட்டி விகிதம் மேலும் உயரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வீடுகளின் விலையும் இந்த ஆண்டு முதல் உயரும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. வீடுகளுக்கு அதிகம் தேவை இருப்பதே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு வீடு விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. மேலும் வீடு விலை உயர்வால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வீட்டு வாடகை தொகையும் உயரும் என ராய்ட்டர்ஸ் ஆய்வு ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

Categories

Tech |