தனியார் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலிருந்து கார் ஒன்று ஆத்தூர் நோக்கி சென்றது. அதேபோன்று ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தபோது ஆயில்பட்டியில் இருக்கின்ற தனியார் கல்லூரி அருகில் வரும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக காரும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்து, கார் இரண்டும் ரோட்டின் ஓரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது.
இதில் காரில் பயணித்த 4 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.