Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. மாமியார்-மருமகள் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

அதிவேகமாக சென்ற வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற மாமியார், மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்தாய்(55) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சீவிகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி விஜயசாந்தி(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு பவுன்தாயும், விஜயசாந்தியுன் இரவு 7 மணி அளவில் சாலையில் நடந்து சென்றுள்ளனர். இவர்களுடன் அதே பகுதியில் வசிக்கும் அனிதா என்பவரும் நடந்து சென்றுள்ளார்.

அப்போது கேத்தையகவுண்டன்பட்டி நோக்கி வேகமாக சென்ற வாகனம் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்தாய், விஜயசாந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அனிதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவுன்தாய் மற்றும் விஜயசாந்தி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |