Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனின் சாவில் சந்தேகம்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பாறையூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மகன் சின்ராஜ் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி எனது மகன் இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் அந்தியூருக்கு சென்று வந்துள்ளார். மறுநாள் காலை டீ குடித்து விட்டு வருவதாக சின்ராஜ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

கடந்த 24-ஆம் தேதி கொட்டகையில் சின்ராஜ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு எனது மகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |