Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராம தண்டலம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஏழுமலை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஏழுமலை திடீரென விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஏழுமலையை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |