முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஷ்வாம்பாள் சமுத்திரத்தில் விவசாயியான கலிங்க மூர்த்தி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளியம்மை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.