சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி(80) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.