அரசு பேருந்தும் கதிரடிக்கும் எந்திரமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு வழிப்பாதையில் கதிரடிக்கும் எந்திர வாகனம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் கதிரடிக்கும் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சரஸ்வதி, ஹேமமாலினி, ராஜலட்சுமி ஆகிய 3 பேரையும் வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.