Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் ரசாயன தொழிற்சாலையில்…. பெரும் தீ விபத்து….பொதுமக்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்கா நாட்டின் நெப்ராஸ்காவில் உள்ள ஒமாஹா என்ற நகரத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு  வருகின்றது. இதில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவத் தொடங்கிய தீ, எல்லா இடத்திலும் பரவி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடுமையான தீ விபத்து என்பதால், மூன்று அலாரம் தீ விபத்து என்று இந்த தீ விபத்தை வகைப்படுத்துகின்றனர். இருப்பினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.

மேலும் அந்த ரசாயன ஆலைக்குள் புரோபேன் என்ற வேதிப்பொருள் தொட்டிகள் மற்றும் பிற எரியக்கூடிய இரசாயனங்கள் இருக்கிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பின்வாங்கி சென்றனர். இந்நிலையில் தீயணைக்கும் பணி இன்னும் தொடரும் நிலை உள்ளது. மேலும் இது ஒரு நாக்ஸ்-கிரீட் என்ற ரசாயன தொழிற்சாலை ஆகும். இதில் கான்கிரீட் வேலைக்கு உதவும் இரசாயன பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இதையடுத்து ரசாயன ஆலையில் இருந்து எழும்புகின்ற புகையால் யாருக்கும் எந்த வித பெரிய அளவிலான உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அடர்த்தியான கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் சில மைல்களுக்கு அப்பால் வரையிலும் காணப்பட்டன. இந்த காட்சியினை நூற்றுக்கணக்கான மக்கள் கூரைகள், தாழ்வாரங்கள் மற்றும் நடைபாதைகளில் கூடி நின்று பார்த்து  வருகின்றனர்.

Categories

Tech |