Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இன்று முதல் புதிய வட்டி அமல்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!!!

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியா மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஆனது ஜூன் 1ம் தேதி முதல் (இன்று) அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி  50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு இதற்கு முன்பாக 2.90 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டு 2.75 சதவீதமாக வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் டெபாசிட் வரம்பு என்பது குறிப்பிடத்தக்கது. 100 கோடி ரூபாய்க்கு மேல் 500 கோடிக்குள் டெபாசிட் செய்ய 2.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3.10 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வட்டிவிகிதங்கள்:

50 லட்சம் ரூபாய் வரை – 2.75%

100 கோடி ரூபாய் வரை – 2.90%

500 கோடி ரூபாய் வரை – 3.10%

1000 கோடி ரூபாய் வரை – 3.40%

1000 கோடிரூபாய்க்கு மேல் – 3.55%

Categories

Tech |