நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மாதம்தோறும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். அந்த நாட்களில் வங்கிகள் இயங்காது.
ஆனால் உத்திரபிரதேசத்தில் 6 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. எனவே வங்கி விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளில் பணத்தை எடுக்க மட்டும் டெபாசிட் செய்ய போன்ற பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுங்கள்.
ஜூன் 2 (வியாழன்): மகாராணா பிரதாப் ஜெயந்தி/தெலுங்கானா ஸ்தாபக தினம் – ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா
ஜூன் 3 (வெள்ளி): ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினம் – பஞ்சாப்
ஜூன் 5 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
ஜூன் 11 (சனி): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
ஜூன் 12 (ஞாயிறு): வார விடுமுறை
ஜூன் 14 : ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப்
ஜூன் 15 (புதன்): ராஜ சங்கராந்தி/ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் – ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூன் 19 (ஞாயிறு): வார விடுமுறை
ஜூன் 22 (புதன்): கர்ச்சி பூஜை – திரிபுரா
ஜூன் 25 (சனி): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
ஜூன் 26 (ஞாயிறு): வார விடுமுறை
ஜூன் 30 (புதன்): ராம்னா நீ – மிசோரம்