மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் மீண்டும் சன் டிவிக்காக புதிய சீரியல் ஒன்றை இயக்கவுள்ளார். மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு, குலதெய்வம் போன்ற சீரியல்களை சன் டிவிக்காக கொடுத்தவர் திருமுருகன். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்கும் புதிய சீரியலில் நடிக்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சீரியலில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்பதை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிக்க ஆர்வம் இருப்பவர்கள் அணுகவும் என்று விளம்பரம் ஒன்று கொடுத்து இருக்கின்றனர். தற்போது அதற்கான விளம்பர புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த சீரியலை சன் டிவியில் பார்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால் திருமுருகன் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.