Categories
உலக செய்திகள்

உக்ரைன் கோர்ட்டில் போர்க்குற்ற விசாரணை….11 ஆண்டுகள் சிறை….வெளியான அதிரடி தீர்ப்பு….!!!!

உக்ரைன் நாட்டில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 2-ரஷிய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உக்ரைனில் உள்ள ஒரு கோர்ட்டில், ரஷிய வீரர்கள் இருவர் மீதும், வடகிழக்கு கார்கிவ் பகுதியில் உள்ள 2-கிராமங்கள் மீது கிராட் என்ற ஏவுகணைகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷிய படைவீரர்களின் சார்பில் உக்ரேனிய வழக்கறிஞர்கள் வாதம் செய்துள்ளார்கள். அப்போது அவர் கூறியுள்ளதாவது, அந்த  படைவீரர்கள் இருவரும் ரஷிய ரணுவத்தின் கட்டளைகளைப் பின்பற்றி, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்  செயல்பட்டனர் என்று வாதிட்டனர். இதையடுத்து கூறிய வழக்கறிஞர்கள் தங்களுக்கும் ரஷியாவில் உள்ள சட்ட அதிகாரிகளுடனோ அல்லது பிற இராணுவ அதிகாரிகளுடனோ எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் விசாரணைக்கு வந்தது. மேலும் அலெக்சாண்டர் போபிகின் மற்றும் அலெக்சாண்டர் இவானோவ் ஆகிய இருவருக்கும் 11-ஆண்டுகள்  6- மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் பொதுமக்கள் பகுதிகளில் பீரங்கிகளை சுட்ட குற்றவாளிகள் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. 

Categories

Tech |