இந்தியா கூடுதலாக 40 ஆயிரம் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை நாடு தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு உதவும் அடிப்படையில் சென்ற மார்ச் மற்றும் ஏப்ரலில் இந்தியா 4 லட்சம் டன் பெட்ரோலையும், டீசலையும் அங்கு அனுப்பி வைத்தது.
சென்ற மாதம் 23-ஆம் தேதி 40 ஆயிரம் டன் பெட்ரோலை இந்தியா வழங்கியது. இந்த நிலையில் கூடுதலாக 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா கப்பலில் அனுப்பி வைத்தது. அந்த டீசல் நேற்று முன்தினம் மாலை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அங்குள்ள இந்தியதூதரகம் தெரிவித்துள்ளது.