டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழத்தில் CAA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே வந்த மர்மநபர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் , மாணவர்களை நோக்கியும் சுட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு மாணவர்கள் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர் யார் ? என்ன பின்னணி என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றார்கள். அவர் டெல்லி காவல்துறைக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியதாகவும் சொல்லப்படுகின்றது.