அமெரிக்காவில், உலகின் மிகவும் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை தின்று இளைஞர் ஒருவர் கின்னஸ்சாதனை படைத்திருக்கிறார்.
அமெரிக்க நாட்டில் கிரேக் ஃபோஸ்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் உலகின் மிகவும் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை படைத்துள்ளார்.
நாம் உணவில் எடுத்துகொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள்(SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அந்த வகையில் கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றிலுள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 ஆயிரத்து 183 ஆகும்.