உலக நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்நிலையில் தற்போது குரங்கு காய்ச்சல் சர்வதேச அளவில் வேகமாக பரவி வருகிறது. இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையும் பரவி வருகிறது.
இந்த குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் 300 பேரை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் பிரேசிலில் குரங்கு காய்ச்சல் பரவ தொடங்கிவிட்டது. அங்கு 2 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.