உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 100வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனுக்கு நீண்டதூர அதி வீன ராக்கெட் அமைப்புகளை அனுப்ப உள்ளது என்று அமெரிக்கா நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறியது, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படை எடுப்பு ராஜதந்திரத்தின் மூலமே முடிவடையும். ஆனால் பேச்சுவார்த்தையின்போது உக்ரைனுக்கு அதிக செல்வாக்கைக் கொடுக்க அமெரிக்கா குறிப்பிடத்தக்க ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. அதனால்தான் உக்ரைனுக்கு இன்னும் மேம்பட ராக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க நான் முடிவு செய்துள்ளேன். மேலும் அவை எதிரிகளின் முக்கிய இல க்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.