பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே ஆகியோர் மீது கோவா போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை காதலித்து 2020ல் திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தேனிலவு கொண்டாட கோவா சென்றனர்.
அங்கு இருவரும் சேர்ந்து சபோலி அணையில் நிர்வாண படம் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, கோவா போலீசார் பூனம் பாண்டே, சாம் பாம்பே இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கருத்து வேறுபாட்டால் பூனம் பாண்டே கணவரை பிரிந்தார். இந்நிலையில் ஆபாச வீடியோ வழக்கில் இருவர் மீதும், கனகோனா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், பூனம் – சாம் ஜோடிக்கு எதிராக 39 பேர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.