Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தரமற்ற உணவுப் பொருட்களை விற்கக் கூடாது”…. வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு….!!!!

தரமற்ற உணவுப் பொருட்களை விற்க கூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கின்ற இனிப்பு கடைகள், பேக்கரிகள், குளிர்பான கடைகள், டீக் கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் மற்றும் காய்கறி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உணவு பகுப்பாய்வாளர் சரவணன் ஆகியோர் திடீரென்று ஆய்வு செய்தார்கள். அப்போது 60-க்கும் அதிகமான உணவு பொருட்களை தரம் குறித்து நடமாடும் உணவு பரிசோதனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதில் ஒரு சில உணவுகள் தரம் குறைந்ததாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று தரம் குறைவான உணவு பொருட்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |