Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கர சம்பவம்… மனைவி, குழந்தைகளை கொன்று என்ஜினியர் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மனைவி, குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் இஷ்டசக்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் என்ஜினியர் பிரகாஷ் (41). இவர் தனது மனைவி 39 வயதுடைய காயத்ரி, மகள் 13 வயதுடைய நித்யஸ்ரீ, மகன் 8 வயதுடைய ரித்தீஷ் ஆகியோரை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அதை ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த கொடூர கொலை சம்பந்தமாக சங்கர்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயத்ரி வீட்டின் அருகில் வடிவேல் தெருவில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்துள்ளார். கடை நடத்துவதற்கு வட்டி பணம் கொடுப்பவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி உள்ளார்கள். இதனால் வீட்டுக் கடன், கார் கடன் என மொத்தம் ரூ 87 லட்சத்திற்கும் அதிகமாக கடன் இருந்துள்ளது. இதனால் கடனை அடைக்க முடியாமல் பிரகாஷ் தனது குடும்பத்தினரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நானும், எனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு என்று பிரகாஷ் ஆங்கிலத்தில் இரண்டு கடிதங்களை எழுதி வைத்துள்ளார்கள். காவல் துறையினர் அதை கைப்பற்றினர்.

அதில் ஒரு கடிதம் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. மற்றொரு கடிதம் நோட்டில் இருந்துள்ளது. மேலும் அதில் இருந்த கையெழுத்து பிரகாஷ் உடையது தானா என்பது குறித்து தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதேபோன்று கொலை செய்வதற்கு முன் மனைவி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே தடவியல் நிபுணர்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள். அந்த அறிக்கை வந்த பிறகு தான் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் கூறினார்கள்.

இந்த சம்பவம் நடந்த அன்று அதிகாலை 2. 50 மணிக்கு பிரகாஷ் தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு வாட்ஸப்பில் நாளைக்கு வீட்டுக்கு வா என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு அவருடைய நண்பர் என்ன விஷயம் என்று கேட்டதற்கு நாளைக்கு நேரில் வா என்று தகவல் அனுப்பி அதில் தம்ஸ் அப் குறியீடு போட்டு இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் சம்பவம் இரவு 11 மணியளவில் நடந்தது என்று கூறினார்கள். ஆனால் அவருடைய நண்பருக்கு அதிகாலை 2.50 மணிக்கு தகவல் அனுப்பியதால் இந்த கொலை அதிகாலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அதன் பின் அதிகாலையில் நண்பருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றார்கள். காயத்ரி மாத வட்டி மட்டுமின்றி தின வட்டி, வார வட்டி என பலரிடம் கடன் வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் அவரை அடிக்கடி கடைக்கு வந்து கடன் கேட்டு வந்ததாக தெரிகிறது. எனவே அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியலை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

மேலும் அவர்களில் யாராவது காயத்திரியை மிரட்டியுள்ளார் என்று அவருடைய செல்போன் உரையாடல்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போன்று பெண் ஊழியரிடம் கடை சாவியை வைத்துக்கொள்ள சொன்ன பிரகாஷ் வேலைக்காக தான் பயன்படுத்திய லேப்டாப்பை அலுவலகத்தில் கொடுக்கும்படி கூறியிருக்கிறார். அதன்பின் அவர் மருந்து கடையில் மருந்து வாங்கி சென்றதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |