Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் நின்ற படகால்…. பறிபோன இந்திய வாலிபனின் உயிர்…. பிரபல நாட்டின் பரபரப்பு….!!

நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்களுடன் நீரில் குதித்த இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். 

தெலுங்கானா நாட்டில் ராஜண்ணா-சர்கில்லா  மாவட்டத்தில் வெமுலவாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை  சேர்ந்தவர் யஷ்வந்த் குமார். இவருடைய வயது 25 ஆகும். இவர் ஐதராபாத்தில் பி.டெக் படித்துள்ளார். பின்பு, கடந்த டிசம்பர் மாதம் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் மேற்கு புளோரிடாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று பொழுதுபோக்கிற்காக  தனது நண்பர்களான சுபஉதய், மைசூரா, சரண், ஸ்ரீகர் மற்றும் சார்வரி ஆகியோருடன் வாடகைக்கு படகு ஒன்றை எடுத்து கொண்டு மேற்கு புளோரிடாவின் கிராப் தீவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்  படகு திடீரென நின்று விட்டது. இதனால் நண்பர்களுடன் சேர்ந்து படகை சரி செய்ய நடுக்கடலில் குதித்துள்ளார். அப்பொழுது கடலில் நீரோட்டம் வலிமையாக இருந்துள்ளது.  அந்த சமயத்தில் அப்பகுதியில் வந்த ஒக்கலூசா கவுன்டி ஷெரீப் அலுவலக படகு ஒன்று  4 நண்பர்களை மீட்டுள்ளது. ஆனால் கடலில் அலைகள் பெரிய அளவில் எழுந்து வந்ததில் யஷ்வந்த் படகிற்கு திரும்பி வர முடியவில்லை. இதனால் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து கடலோர காவல் படையினர் பல மணிநேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காணாமல் போன யஷ்வந்தின் உயிரற்ற உடல் மட்டும்  நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |