வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் உமாமகேஸ்வரி என்பவர் மேலாளராக பணியாற்றிய அவர். அவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து அதன் மூலமாக சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது உமா மகேஸ்வரி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
அதனால் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அவர் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதன் மூலமாக சுமார் ஒரு கோடி ரூபாய் வரை திருடப்பட்ட சம்பவம் அம்மாவட்ட பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.