Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. இனி இப்படி செய்யாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதனுடன் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை குடும்ப அட்டை தங்களின் கைரேகைகளை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.

அதன்மூலமாக தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து 2 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்க விரும்பும் பொருட்களை மட்டும் கொடுக்கலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேவைப்படாத ரேஷன் பொருட்களை பெற்று மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அதனை மீறி செயல்படுபவர்களை குடும்ப அட்டைகள் பண்டகமில்லா குடும்ப அட்டைகளாக மாற்றப்படும். ரேஷன் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் வாகனங்களில் ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |