உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 4.1% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரமானது நான்காம் காலாண்டில் குறைவான வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது 4.1% தான் வளர்ச்சியடைந்திருக்கிறது.
பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பணவீக்கம் மிகப்பெரும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் சீன நாட்டின் பொருளாதாரமானது 4.8% வளர்ச்சியடைந்திருந்தது. இந்திய நாட்டின் பொருளாதாரமானது, அதனை காட்டிலும் குறைந்த வளர்ச்சியை கண்டிருப்பதாக புள்ளியில் அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது.