கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அருகே குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிக்கபட்டது. டிஎன்பிஎஸ்சி குழுவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து விதமான வினாக்களுக்கான விடைகள் கிடைத்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.