Categories
மாநில செய்திகள்

“மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்”….. முதல்வர் உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசுத்துறை செயலாளர்கள் உடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான இன்று 19 துறை செயலாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். திட்டங்களின் துறை செயலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் “ஏழை-எளிய மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் எவ்வித தொய்வும் தாமதமும் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். மக்கள் நம் மீது அதிக அளவிற்கு எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர். அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திட்டங்களை நிறைவேற்றும் போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை செயல்படுத்த வேண்டும். அரசு அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களின் அனைவரது கடமை.  எந்தத் திட்டமாக இருந்தாலும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் உங்களது பணி சிறப்பாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |