அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் அரசு பேருந்து டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து ஓய்வு பெறும் சென்னகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னகிருஷ்ணன் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் லட்சுமணன் சென்னகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்வதாக கூறி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது.
அரசு பேருந்துகளில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வரும் சென்ன கிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் போக்குவரத்து கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.