Categories
விழுப்புரம்

“இளைஞர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளர்”…. 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு….!!!!!

கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்ற 2010ஆம் வருடம் ஜூலை 30ஆம் நாள் அன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருகே இருக்கும் வேட்டைக்காரன்பட்டியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிலர் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு வேலை செய்துவருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்போது பணியாற்றிய செஞ்சி தாசில்தார் ஜெயமாலா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கல்குவாரி சென்று சோதனை இட்டார்கள். அங்கு இருபத்தி ஒன்பது பேர் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

இருளர் வகுப்பைச் சேர்ந்த இருபத்தி ஒன்பது பேரை சட்டவிரோதமாக குறைந்த கூலியில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்ததை தெரியவந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட கணேசன் என்பவர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்கியதாவது குற்றம் சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 15 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |