Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாற்றுத்திறனாளி பெண்ணை அறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரை காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை விட்டு பிரிந்து திருமுருகன்பூண்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டன் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை தனது வீட்டின் அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திருமுருகன்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |