நடிகை பூர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை இணையதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
மலையாள சினிமா உலகின் மூலம் நடிகையாக அறிமுகமானர் பூர்ணா. இவர் தமிழ் சினிமா உலகில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளையை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன். இப்போது இது அதிகார பூர்வமானது என கூறியுள்ளார்.