Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்”…. இதுதான் காரணமோ…? வெளிகான பல தகவல்கள்”…!!!!

பிரபல பின்னணிப் பாடகரான கேகேவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

பிரபல பின்னணி பாடகரான கேகே என கூறப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு ஏராளமான பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் நேற்று நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏ ஆர் ரகுமானுக்கு இவரின் குரல் பிடித்ததால் காதல் தேசம் திரைப்படத்தில் கல்லூரி சாலை, ஹலோ டாக்டர் உள்ளிட்ட பாடல்களை பாடும் வாய்ப்பை தந்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அறைக்கு சென்ற கேகே திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார்.

இவரி திடீர் உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் இவரின் இறப்பை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். அவரின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாக சொல்லப்படுகின்றது அவர் பங்கேற்ற அரங்கத்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் இது முக்கிய காரணமாக இருக்கலாம் என செல்லப்படுகின்றது. மேலும் அந்த அரங்கத்தில் 3000 பார்வையாளர்கள் மட்டும் தான் இருக்க முடியும். ஆனால் அங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியதாகச் சொல்லப்படுகின்றது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டது. இதனால் அரங்கத்தில் வெப்பம் அதிக அளவு இருந்தது. இதனால் அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இதுபோல பல குற்றச்சாட்டுகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |