கூட்டுறவு வங்கி பெண் மேலாளர், மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கீழ் குடியாத்தத்தில் உள்ள நிலையில் 2018- மற்றும் 2019 ஆம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்ததாக சொல்லப்படுகின்றது.
உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து புகார்கள் சென்றதையடுத்து குடியாத்தம் வங்கியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்ட தன் முடிவில் உமாமகேஸ்வரி பண மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் புகார் செய்தனர். இதன் விளைவாக இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பின் மகேஸ்வரியை கைது செய்தார்.