Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்க கொர….! ஷாக்க கொர….! கோடியில் புரளும் அனிருத்….. இப்ப அவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?….!!!

தமிழில் தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் சம்பளம் குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு பிடித்தபடி பாடல்களுக்கு இசையமைக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் நடித்து வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

தற்போது உலகநாயகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு நான்கு கோடி சம்பளம் வழங்கப் பட்டுள்ளதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக இவர் 2 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில் விக்ரம் படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

Categories

Tech |