Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்..!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முறைகேட்டில் அடுத்தது அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று முக ஸ்டாலின் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், சிபிஐ விசாரணையில் தான் முழுமையான தகவல்கள் வெளியாகும் என்பதால் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் டி.என்.பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அடுக்கடுக்காக வெளிவரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என மக்களிடையே சந்தேகம் நிலவுகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பி விடக்கூடாது என்று தெரிவித்தார்.

Categories

Tech |