Categories
தேசிய செய்திகள்

திக் திக் கொரனா…. 4 பேருக்கு அறிகுறி …. மாணவிக்கு பாதிப்பு ….. அமைச்சர் உறுதி ….!!

கேரளவில் 4 பேருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் ஒரு மாணவிக்கு கொரனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தகவல் வெளியாகி மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்துள்ளது.

தற்போதைய தகவலின் படி இந்த வைரஸ் 17 நாடுகளுக்கு பரவியுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது மக்களை பீதியடைய வைத்துள்ளது. வுஹான் பல்கலைக்கழகத்திலிருந்து கேரளா திரும்பிய  மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 800க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்துவது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில் , கேரளாவில் கொரனா வைரஸ் அறிகுறிகள் உள்ள 4 பேரில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவி திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மற்ற மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.சீனாவில் இருந்து கேரளாவுக்கு வருபவர்கள் கண்டிப்பாக சுகாதாரத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.

Categories

Tech |