Categories
பல்சுவை

துணியில் இருக்கும் எண்ணெய் கறையை…. சுத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

துணியில் ஏற்படும் கறைகளை சுத்தம் செய்வது என்பது சிரமமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக எண்ணெய் கறைகளை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதனை சரி செய்ய முடியாது. அப்படிப்பட்ட எண்ணெய் கறைகளை சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரிசெய்துவிடலாம். அதற்கு இந்தப் பொருட்களையெல்லாம் பயன்படுத்தினால் கறைகளை எளிதில் நீக்கிவிடலாம் .

சமையல் சோடா
வெள்ளை வினிகர்
வெள்ளை சுண்ணாம்பு
சிட்ரஸ் சார்ந்த டிஷ் சோப்
டூத் பிரஸ்
வெள்ளைத்துணி
உப்பு
ஸ்க்ரப்பர்

கறைகளை டிஷ் சோப் பயன்படுத்தி நீக்குதல்.

துணியில் எந்த இடத்தில் கறை உள்ளதோ அதற்குப்பின்னால் ஆடையின் கீழ் ஒரு அட்டையை வைக்கவேண்டும். முடிந்தவரையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றுவதற்கு ஸ்க்ரப்பரை பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு சிறிது பேப்பர் டவல் கொண்டு அந்த கறையை அகற்றவும்.

கிரீஸ் பகுதியில் ஒரு துளி வினிகர் சேர்க்க வேண்டும். அதிரை 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக ஊறவிடவும். அதன்பிறகு டூத் பிரஷை பயன்படுத்தி நன்றாக தேய்த்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்து கரையைத் துடைத்து எடுக்க வேண்டும். பின்பு காற்றில் உலர வைத்த பிறகு கறை முற்றிலும் மறைந்து போகும் வரை தேவைக்கேற்ப மீண்டும் இதனை செய்யலாம்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா எப்படிப்பட்ட மோசமான கறைகளை நீக்குவதற்கும் சிறந்த ஒன்று. துணியில் கறையின் மீது பேக்கிங் சோடாவை தெளிக்க வேண்டும். கறையை தேய்க்க டூத் பிரசை பயன்படுத்த வேண்டும். பேக்கிங் சோடா போட்டு முடிந்த வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். முதல் நாள் இரவு துணியை ஊற வைத்து விட்டு அடுத்த நாள் துவைப்பது சிறந்தது. ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சம பாகமாக வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கொள்ள வேண்டும். அதனை கறை மீது தெளித்து, டூத் பிரஷை பயன்படுத்தி நன்றாக தேய்த்தால் கறை முற்றிலும் நீங்கிவிடும்.

ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் கறையை எப்படி அகற்றுவது?

ஜீன்ஸில் எண்ணெய் கறை பட்டால் அதனை அகற்றுவது மிகவும் எளிதான ஒன்றுதான். அதற்கு முதலில் ஒரு பேப்பர் டவலை பயன்படுத்தி முதலில் கரையை துடைத்து எடுக்க வேண்டும். அதன்பிறகு கறை உள்ள பகுதியில் உப்பு தடவி குறைந்தது 20 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்கவும். அடுத்து சோப்பு போட்டு நன்றாக தேய்க்கவும். முதல் முறை செய்யும்போது ஓரளவு கரை குறையும்.

தேவைப்பட்டால் மீண்டும் செய்யலாம். கறை ஏற்பட்ட உடனே அதனை போக்குவதற்கு இதனை செய்யலாம். அதிக நேரம் கரை காய்வதற்கு முன்பே அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். அதிக நேரம் ஆனால் அதனை துணியில் இருந்து நீக்குவது கடுமையானதாக மாறிவிடும்.

Categories

Tech |