Categories
மாநில செய்திகள்

மிக மிக முக்கியம்…. அடுக்கடுக்கான உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்…. “அலர்ட்” ஆன அதிகாரிகள்….!!!

ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்விதமான தொய்வும் தாமதமும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் 19 துறைகளின் செயலாளர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவித தொய்வும் தாமதமும் இருக்கக் கூடாது. பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர் மற்றும் சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற பணியாற்ற வேண்டும். தமிழக மக்கள் நம் மீது அதிக அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளிலும் பயன்படுத்தி திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

அரசு அறிவிக்கும் திட்டங்களையும் பயன்களையும் மக்களிடம் அப்படியே கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக சாலை அமைத்தல்,குடிநீர் திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு ஆகிய திட்டங்களில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |