சேலம் சூரமங்கலம் ரயில்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது. அதனடிப்படையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியே போகும் 8 ரயில்களில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியை கூடுதலாக இணைத்து நிரந்தரமாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் வகையில் மங்களூரு சென்டிரல்-சென்னை சென்டிரல் (வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்-22638) நேற்று முதல் கூடுதலாக 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட்டது.
சென்னை சென்டிரல்-மங்களூரு சென்டிரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-22637) நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதலும், சென்னை சென்டிரல்-மங்களூரு சென்டிரல் ரயிலில் (வண்டி எண்-12601) இன்று (வியாழக்கிழமை) முதலும், மங்களூரு சென்டிரல்-சென்னை சென்டிரல் ரயிலில் (வண்டி எண்-12602) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
இதையடுத்து திருவனந்தபுரம்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-22641) இன்று முதலும், ஷாலிமர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-22642) வரும் 5ஆம் தேதி முதலும், கன்னியாகுமரி-ஸ்ரீ மத்தா வைஷ்ண தேவி காத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-16317) நாளை முதலும், ஸ்ரீ மத்தா வைஷ்ண தேவி காத்ரா-கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-16318) வரும் 6-ஆம் தேதி முதல் கூடுதலாக 2ஆம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளன. இத்தகவலை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.