Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை…. கோவை மக்களின் கோரிக்கை…. நடவடிக்கை எடுக்குமா அரசு….?

கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்  என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றினால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இந்தப் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இப்படி இருக்கையில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பெருந் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தொற்று குறைந்ததால் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வெளி மாநிலத்திற்கு மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு நிறைய பணம் செலவாவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே அப்பகுதி மக்கள் அரசு சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |