அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்மநபர் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்.
அமெரிக்காவில் இருக்கும் துல்ஷா என்னும் நகரத்தின் செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனைக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதில் 4 பேர் பலியானதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இந்த தாக்குதலில் பல பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. எனவே, காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.