Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தியில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்..!!

நீளமான, கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்:

செம்பருத்தி பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நெறைய பேருக்கு தெரியமாட்டுக்கு.  செம்பருத்தி  இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவை நமது தலைமுடி நன்கு வளருவதற்கும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வு.

செம்பருத்தி பூ மற்றும் அவற்றின் இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்..?

செம்பருத்தி பூவின் காய்ந்த மொட்டுக்களை  தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து அதை தினமும் தலையில் தடவி வந்தால், நம் கூந்தலின் கருமை நிறம் மாறாமல் பாதுகாக்க படும்.

நாம் அடிக்கடி உடல் சோர்வாக காணப்பட்டால் செம்பருத்தி பூவை உணவிலும் சேர்த்து கொள்ளலாம். செம்பருத்தி இலைகளை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து டீயாக கூட அருந்தலாம், அவ்வாறு அருந்தினால் உடலில் ரத்த அழுத்தம் நடுநிலையாக இருக்கும்.

நம் உடலில் ஏற்பட கூடிய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து விடும். உடலில் அதிகமாக கொழுப்பு சேர்வதை தடுத்து நிறுத்தும். குளிர்ச்சியும் அளிக்கும்.

நம்முடைய சருமத்தை பொலிவுடன் பளபளப்பாக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.  செம்பருத்தி தாவரத்தின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. எந்த வித பக்கவிளைவும், பாதிப்பும் இல்லாத இயற்கையின் கொடை. செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாயைத் தூண்டக் கூடியதும் இந்த செம்பருத்திக்கு உண்டு. செம்பருத்தியின் இலைகளை அரைத்து தலையில் தேய்ச்சி குளிக்கலாம். தலை முடி உதிராமல் இருக்கும், கருமை நிறம் மாறாமல் காத்துக்கொள்ளும்.

கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் செம்பருத்தியின் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வந்தால் வயிற்றில் இருக்கும் புண் எளிதில் ஆறிவிடும். வெள்ளைப்படுதல் நின்று விடும், ரத்தம் சுத்தமாகும், இதயம் பலம் அடையும்.

100 கிராம் செம்பருத்தி இலைகளை, 400 மில்லி நல்ல எண்ணெயில் போட்டு அந்த கலந்த பாத்திரத்தை ஒரு துணியால் மூடிக் கட்டிவிட வேண்டும்.

அதை பத்து நாள் வெயிலில் காயவைத்து காலை , மாலை என எண்ணெயை நன்கு கலக்கிவிட்டு மூடி வைக்க வேண்டும். பின்னர் அந்த எண்ணெயை வடித்து எடுத்து சம அளவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து  பதப்படுத்தி கொண்டு அந்த தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வந்தால் நீளமான, அழகான, கருமையான கூந்தல் வளரும்.

Categories

Tech |