ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள், கல்வியாளர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குழு ஒரு வருடத்தில் கல்விக் கொள்கையை வடிவமைத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.