Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் சில பகுதிகளை கொடுத்தாலும்…. போர் முடிவடையாது… -ஒலேனா ஜெலென்ஸ்கா…!!!

உக்ரைன் அதிபரின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா, தங்கள் நாட்டினுடைய சில பகுதிகளை ரஷ்யாவிற்கு கொடுத்தாலும் போர் நிறைவடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்ததாவது, சில நேரங்களில் செல்வாக்கு மிகுந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள்  வெளியிடும் அறிக்கைகள் அனைத்தையும் உக்ரைன் மக்கள் எளிதாக எடுத்து விட முடியாது. எங்கள் நாட்டின் சில பகுதிகளை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது.

அது சுதந்திரத்தை விட்டுக் தருவது போல ஆகிவிடும். ரஷ்யப்படையினர், டான்பாஸ் பகுதியில் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் நாட்டினுடைய சில பகுதிகளை அவர்களிடம்  ஒப்படைத்தாலும் போர் முடிவடைய போவதில்லை. ஆக்கிரமிப்பாளர், தொடர்ந்து எங்கள் நாட்டை எதிர்த்து தீவிர தாக்குதல்களை மேற்கொள்வார் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |